தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க தயார் - நடிகர் இனிகோ பிரபாகர் - சவாலான வில்லன் கதாபாத்திரம்

சென்னை: சவாலான வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க தயார் என நடிகர் இனிகோ பிரபாகர் கூறியுள்ளார்.

இனிகோ பிரபாகர்
இனிகோ பிரபாகர்

By

Published : Jul 7, 2020, 4:13 PM IST

தமிழ் சினிமாவின் சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து பின் தனது தனித்துவமான நடிப்புத் திறமையால் பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பலரது பாராட்டை பெற்றவர் நடிகர் இனிகோ பிரபாகர்.

'சென்னை 28', 'சென்னை 28 II', 'பூ', 'சுந்தரபாண்டியன்', 'ஆர்.கே நகர்' என இவர் நடித்த அனைத்து படங்களிலும் இவரது நடிப்பும், கதாபாத்திரத்தின் தன்மையை கையாண்ட விதமும் பலரையும் கவர்ந்தது. 'அழகர்சாமியின் குதிரை', 'ரம்மி', 'பிச்சுவாகத்தி', 'வீரய்யன்' படங்களில் நாயகனாக நடித்த இவர், தற்போது இன்னும் இரண்டு படங்களில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.

இதுகுறித்து இனிகோ பிரபாகர் கூறுகையில், நான் என்றும் என் கதாபாத்திரத்தின் தன்மை மாறாமல் நடிப்பது ரசிகர்களுக்கு பிடித்திருந்தது.

அதிலும் ஆர்.கே நகர் படத்தில் வில்லனாக நடித்திருந்தாலும், அந்த படத்தில் கதாநாயகனுக்கு நிகரான கதாபாத்திரம் என்பதால் எனது நடிப்பு யதார்த்தமாக இருக்க வேண்டும் என்று இயக்குநர் சரவண ராஜன் விரும்பினார், நானும் அதையே செய்தேன்.

இயக்குநர் வெங்கட்பிரபு, 'ஆர்.கே நகர்' படத்தில் என் நடிப்பை பலரும் பாராட்டியதாக கூறியது என்னை மேலும் உத்வேகப்படுத்தியது என்றார்.

சவாலான வில்லன் கதாபாத்திரம் கிடைத்தால் மீண்டும் நடிப்பீர்களா என்று கேட்டதற்கு, ரசிகர்கள் பலர் என் சமூக வலைதளத்தில் இதையே கேட்கின்றனர். கண்டிப்பாக செய்வேன். சவாலான கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கிறது.

தற்போது இரண்டு புதிய படங்களில் கதாநாயகனாக நடிக்கிறேன். இந்த இரண்டு படங்களின் விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details