தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

அன்றாட வாழ்க்கையில் திடீர் மாற்றம்... உண்மையை ஜீரணிக்க முடியவில்லை - நடிகை ராஷ்மிகா மந்தனா - நடிகை ராஷ்மிகா மந்தனா லேட்டஸ் செய்திகள்

சென்னை: கோவிட் நாம் நினைத்துப் பார்க்காத வழிகளில் நமக்குச் சவால் விடுகிறது. இது போன்ற விஷயத்திற்கு நாம் தயாராக இல்லை என நடிகை ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.

Rashmika
Rashmika

By

Published : May 25, 2021, 6:43 PM IST

இந்தியாவில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமடைந்த நிலையில், இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக திரைப்பிரபலங்கள் தங்களது சமூக வலைத்தளப்பக்கத்தில் வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் நடிகை ராஷ்மிகா மந்தனா தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளர். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது, "நம்ப முடியாத எதுவும் கணிக்க முடியாத, இந்த காலகட்டத்தில் நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என நம்புகிறேன். கோவிட் நாம் நினைத்துப் பார்க்காத வழிகளில் நமக்குச் சவால் விடுகிறது. இது போன்ற விஷயத்திற்கு நாம் தயாராக இல்லை.

நம் அன்றாட வாழ்கையில் திடீர் மாற்றங்கள், அத்தோடு கவலையும் நிச்சயமற்ற தன்மையும் சேர்ந்து உங்களில் பலருக்கும் எனக்கும் கூட கையாளமுடியாதபடி இருக்கிறது. இது மீண்டும் நடக்கிறது என்ற உண்மையை ஜீரணிக்க எனக்கு சிறிது நேரம் பிடித்தது. ஆனால், இது போன்ற நேரங்களில் நேர்மறையான மன ஓட்டத்துடன் இருப்பதே, இந்தப் போரை வெல்வதற்கான பாதையில் நம்மைச் செலுத்தும் என்பதை நான் உணர்ந்தேன்.

இந்த நிலையில், அடுத்த சில வாரங்களுக்கு அசாதாரண விஷயங்களைச் செய்யும், நம் சாதாரண ஹீரோக்களின் சில கதைகளை நான் முன்னிலைப்படுத்த விரும்புகிறேன். இவை எனக்கு நம்பிக்கையைத் தந்தது. என்னை புன்னகைக்க வைத்தது. மேலும் இதுபோன்ற ஒன்றை எதிர்த்துப் போராடும்போது நம்மிடையே மொழி, நாம் எங்கிருந்து வருகிறோம் என எந்தத் தடையும் இல்லை என்பதை இந்தக் காலகட்டம் உணர்த்தியுள்ளது.

இது மிகவும் பெருமையைத் தருகிறது. உங்களைப் புன்னகைக்க வைக்க உங்களுக்கு கொஞ்சம் நம்பிக்கையைத் தர நான் இதைச் செய்கிறேன். இந்த நாயகர்களுக்கு தனிப்பட்ட முறையில் நன்றி. நாம் இதை வெல்வோம்" எனத் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details