தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

வாத்தியாரே டெம்ப்ளேட்டை வச்சு செய்யும் நெட்டிசன்கள் - rangan vathiyaar memes

‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் வரும் டெம்ப்ளேட் ஒன்று மிகப் பிரபலமாகி இணையம் முழுவதும் உலா வருகிறது.

vathiyaar memes
vathiyaar memes

By

Published : Aug 9, 2021, 3:46 PM IST

Updated : Aug 9, 2021, 3:58 PM IST

பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வெளியான படம் ‘சார்பட்டா பரம்பரை’. ஓடிடி தளத்தில் வெளியான இப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் வரும் டெம்ப்ளேட் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

vathiyaar template

‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் ஆர்யா, பசுபதியை சைக்கிளில் அழைத்துச் செல்வது போல ஒரு காட்சி இருக்கும். வாத்தியாரே என கபிலன் (ஆர்யா) கதாபாத்திரம் பேசும் இந்த டெம்ப்ளேட்தான் கன்டென்டாக மாறியிருக்கிறது.

vathiyaar memes

இதை வைத்து பல வகையான மீம்களை உருவாக்கி சமூக வலைதளங்களில் உலவ விட்டிருக்கிறார்கள். கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக் மீம்களே அதிகம் உலாவி வந்த சமூக வலைதளங்களை இந்த மீம் ஆக்கிரமித்திருக்கிறது.

vathiyaar memes

இந்த மீம்களை பார்த்து மகிழ்ந்ததாக பசுபதியே குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், வாத்தியாரே மீம்களை பார்த்து சிரிப்பை அடக்க முடியவில்லை. உங்கள் பெரும் ஆதரவுக்கும் அன்புக்கும் நன்றி என பதிவிட்டிருக்கிறார்.

vathiyaar memes

இதையும் படிங்க:சிவகார்த்திகேயனின் ’டான்’ படக்குழு மீது வழக்குப்பதிவு

Last Updated : Aug 9, 2021, 3:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details