நடிகர் ராம் சரணுக்கு கடந்த வருட இறிதியில் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா அறிகுறிகள் இல்லாததால் அவர் வீட்டில், தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.
இந்நிலையில் நடிகர் ராம் சரண் தனக்கு கரோனா நெகட்டிவ் வந்துள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். அதில், “உங்கள் அனைவரிடமும் மகிழ்ச்சியான செய்தி ஒன்று சொல்ல விரும்புகிறேன். எனக்கு கரோனா நெகட்டிவ் வந்துள்ளது. மிக விரைவில் படப்பிடிப்பில் கலந்துகொள்ள போகிறேன். எனக்காக பிரார்தனை செய்த அனைவர்களுக்கும் நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.