'இன்று நேற்று நாளை' பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கிவரும் அயலான் படத்தில் சிவகார்த்திகேயன்நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் நடைபெற்று வருகிறது. சயின்ஸ் பிக்ஷன் ஜார்னரில் உருவாகிவரும் இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். 24 ஏ.எம் நிறுவனம் தயாரித்துவந்த இப்படத்தின் உரிமை தற்போது கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனத்திடம் உள்ளது.
நமக்கு எப்பதான் பொறுப்புள்ள பத்திரிகைகள் கிடைக்குமோ - ரகுல் ப்ரீத் சிங் - அயலான் பட அப்டேட்
'அயலான்' படம் தொடர்பாக வெளியான வதந்திகளுக்கு நடிகை ரகுல் ப்ரீத் சிங் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
நீண்ட நாட்களாக நிறுத்திவைத்திருந்த இப்படம் பிப்ரவரி மாதம் மீண்டும் தொடங்கப்பட்டது. இதற்காக படக்குழுவினர் ரகுல் ப்ரீத் சிங்கிடம் தேதிகள் கேட்டதாகவும், அதற்கு அவர் இப்போதைக்கு வர முடியாது என கூறிவிட்டதாகவும் செய்திகள் வெளியாகின. இதனால் படக்குழு ரகுல் ப்ரீத் சிங் மீது கோபத்தில் இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்தச் செய்தியைக் குறிப்பிட்டு ரகுல் ப்ரீத் சிங், எப்போது நமக்கு பொறுப்புள்ள பத்திரிகைகள் கிடைக்கும். எப்போது ஊடகங்கள் உண்மைத்தன்மையை தெரிந்துகொள்ளத் தொடங்கும். சில கூடுதல் ஹிட்டுகளுக்காக மிகவும் கீழ்த்தரமாக நடந்துகொள்கின்றனர். யார் இப்போது முதலில் படப்பிடிப்பை தொடங்குகிறார்கள் என்று தயவு செய்து சொல்லுங்கள் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.