தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர் ரகுல் ப்ரீத் சிங். தெலுங்கில் நாகர்ஜுனா நடித்துள்ள 'மன்மதுடு -2' படத்தில் ரகுல் ப்ரீத் சிங் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து பிஸியாக இருக்கும் இவர், இந்தியன் -2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஷங்கர் -கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகும் 'இந்தியன் 2' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே நடைபெற்று முடிந்தது.
'இந்தியன் 2' படத்தில் ரகுல் ப்ரீத் சிங் கமிட் ஆவாரா? - indian 2
தமிழ் சினிமாவில் பிஸியாக இருக்கும் ரகுல் ப்ரீத் சிங் 'இந்தியன் 2' படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்க இருப்பதாக செய்திகள் வெளியானது. மேலும், காஜல் அகர்வால் ஏற்கனவே கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில், பிரியா பவானி சங்கர், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க இருக்கும் நிலையில் ரகுல் ப்ரீத் சிங்கிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதனால் விரைவில் ரகுல் ப்ரீத் சிங் இந்தியன் -2 வில் இணைய உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பல்வேறு பிரச்னைகளைத் தாண்டி இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதால், ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 'இந்தியன் -2' வைத் தொடர்ந்து, 'தலைவன் இருக்கின்றான்' படத்தை கமல்ஹாசன் இயக்கி முடிப்பார் என தெரிகிறது.