தெலுங்கு திரை நட்சத்திரம் மகேஷ் பாபு, தனது பிறந்த நாளில் சமூக வலைத்தளத்தில், #GreenIndiaChallengeஐ ட்ரெண்ட் ஆக்கினார். இந்த சேலஞ்சை தெலங்கானா அமைச்சர் சந்தோஷ் குமார்தான் முதலில் அறிமுகப்படுத்தினார்.
இந்தச் சேலஞ்சில் மரக்கன்று ஒன்றை நட்டு, அதனை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, அது குறித்து எடுத்துச் சொல்லி, மரக்கன்றுகள் நடுவதற்கு பிறரையும் தூண்ட வேண்டும்.
அதன்படி தனது பிறந்தநாளில், மரக்கன்றுகளை நட்ட மகேஷ் பாபு, நடிகர் விஜய், ஸ்ருதி ஹாசன் ஆகியோருக்கு சவால் விடுத்திருந்தார். இந்நிலையில், இந்தச் சேலஞ்சை ஏற்ற விஜய், மரக்கன்றுகளை நட்டு புகைப்படங்களை தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.