கரோனா ஊடரங்கு காரணமாக சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதால், திரையுலகப் பிரபலங்கள் அனைவரும் வீட்டில் முடங்கி உள்ளனர். இதையடுத்து வீட்டிலிருக்கும் பிரபலங்கள் தாங்கள் செய்யும் தினந்தோறும் வேலை குறித்து அவ்வப்போது தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
"படம் பார்ப்பதா அல்லது சீரிஸ் பார்ப்பதா?" - குழப்பத்தில் ராஜ்குமார் ராவ்! - Latest cinema news
நடிகர் ராஜ்குமார் படம் பார்ப்பதா அல்லது சீரிஸ் பார்ப்பதா என்று தெரியாமல் குழப்பத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் வீட்டில் இருக்கும் பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ், படம் பார்ப்பதா அல்லது சீரிஸ் பார்ப்பதா என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது, "படம் பார்ப்பதா அல்லது சீரிஸ் பார்ப்பதா அல்லது ஒர்க் அவுட் செய்வதா என்று தெரியவில்லை; அல்லது இது அனைத்தையும் செய்வதா என்றும் தெரியவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதைப் பார்த்த நெட்டிசன்கள் அவரவருக்கு விருப்பமான ஒன்றைப் பதிவு செய்தனர். நடிகர் ராஜ்குமார் நடிப்பில் கடைசியாக வெளியான சிம்லா மிர்ச்சி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.