தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

#BXR பாக்ஸிங் ஜிம்மில் 'தர்பார்' சண்டைக் காட்சி - ரஜினி

உலகின் சிறப்பான பாக்ஸிங் ஜிம்களில் ஒன்று என Forbes அங்கீகரித்த  #BXR பாக்ஸிங் ஜிம்மில் ‘தர்பார்’ படத்தின் சண்டைக் காட்சி எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Darbar movie boxing scene

By

Published : Oct 21, 2019, 4:54 PM IST

ரஜினி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் ‘தர்பார்’. லைகா நிறுவன தயாரிப்பில் ரஜினி, நயன்தாரா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இத்திரைப்படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியிருக்கிறார். இதன் படப்பிடிப்புகள் நிறைவுபெற்று போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தொடங்கியுள்ளன.

இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ், படம் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் எல்லாம் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. தற்போது தர்பார் படத்தின் சண்டைக் காட்சி பற்றிய புதிய தகவல் வெளியாகியுள்ளது.

Darbar 2nd look

ஃபோர்ப்ஸ் (Forbes) அங்கீகாரம் பெற்ற உயர்தர #BXR பாக்ஸிங் ஜிம்மில் ‘தர்பார்’ படத்தின் சண்டைக் காட்சி ஒன்று படமாக்கப்பட்டுள்ளதாம். இந்த சண்டைக் காட்சி மிக பிரமாண்டமாக வேற லெவலில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

#BXR boxing gym

இதற்காகரஜினிகடுமையாக ஒர்க் அவுட் செய்திருக்கிறார். செகண்ட் லுக்கில் அதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ‘தர்பார்’ குறித்து மேலும் சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:கஜா புயலில் பாதிப்படைந்தவர்களுக்கு வீடு கட்டிக் கொடுத்த ரஜினி!

ABOUT THE AUTHOR

...view details