2009-ல் ரஜினியின் உடல்நிலை சரியில்லாத நேரத்தில் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான ஸ்டாலின் புஷ்பராஜ் அவரை பெற்றெடுத்த தாய் தந்தையருக்கு மணிமண்டபம் கட்டுவதாக தெரிவித்திருந்தார். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் ஸ்டாலின் புஷ்பராஜ், ரஜினியின் பெற்றோர் ராம்பாய்- ரானோஜிபாய் ஆகியோருக்கு 35 லட்ச ரூபாய் செலவில் மணிமண்டபம் கட்டியுள்ளார்.
ரஜினிகாந்தின் தாய் தந்தையருக்கு மணிமண்டபம் - தாய் தந்தை
திருச்சி: தமிழ் திரை உலகின் உச்ச நடிகர் ரஜினிகாந்தின் தாய் தந்தையருக்கு மணிமண்டபம் திறக்கப்பட்டது.
திருச்சி அருகே உள்ள குமாரமங்கலத்தில் நடிகர் ரஜினியின் பெற்றோருக்கு தனிப்பட்ட முறையில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. தற்போது, பிரமாண்ட முறையில் கட்டப்பட்ட இந்த மண்டபத்தை நடிகர் ரஜினியின் அண்ணன் சத்தியநாராயணராவ் கெய்க்வாட் இன்று திறந்து வைத்தார்.
இதன்பின்னர், பேசிய சத்தியநாராயணராவ், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை. நல்லவர்கள் யார் என பொதுமக்கள் பார்த்து ஓட்டு போட வேண்டுமென அவர் தெரிவித்தார். மேலும் விரைவில் நடிகர் ரஜினி அரசியலுக்கு வர உள்ளதாகக் கூறினார்.