தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் இன்று தமிழ்நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. சமூக வலைதளங்களில் திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது பொங்கல் வாழ்த்துகளை ரசிகர்களுக்கு தெரிவித்த வண்ணம் இருந்தனர்.
கணவருடன் அப்பா ரஜினியை நேரில் சந்தித்த செளந்தர்யா - ரஜினியின் தர்பார்
ரஜினியின் இளையமகள் செளந்தர்யா தனது கணவருடன் பெற்றோரை சந்தித்த புகைப்படம் தற்போது சமூகவலைதளத்தில் அகிகமாக பகிரப்பட்டுவருகிறது.
இந்நிலையில், சென்னை போயஸ் தோட்டத்தில் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெளியே நின்றிருந்த ரசிகர்களுக்கு ரஜினி நேரில் சென்று வாழ்த்துகளை தெரிவித்தார்.
இதனையடுத்து, ரஜினியின் இளைய மகளான செளந்தர்யா ரஜினிகாந்த் தனது சமூகவலைதளத்தில் தங்களது வீட்டில் பொங்கல் கொண்டாடடிய புகைப்படத்தை வெளியிட்டார். அதில் செளந்தர்யா ரஜினிகாந்த் தனது கணவர் விசாகனுடன் ரஜினி - லதாவை நேரில் சென்று சந்தித்த புகைப்படத்தையும் பதிவிட்டிருந்தார். இதனை பார்த்த ரஜினி ரசிகர்கள் அந்த புகைப்படத்தை அதிகளவில் பகிர்ந்துவருகின்றனர்.