ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 'தர்பார்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. லைகா புரொடக்ஷன் தயாரித்து வரும் இப்படம் ரஜினியின் 166வது படமாகும். தர்பார் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்புத் தளத்திலிருந்து படப்பிடிப்புக் காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதனையடுத்து படப்பிடிப்பு நடைபெறும் இடங்களில் அதிக பாதுகாப்பு, புதிய நபர்கள் படப்பிடிப்பு தளத்தில் நுழைவதில் கெடுபிடி காட்டப்பட்டது.
லீக்கான 'தர்பார்' பட வீடியோ - அதிர்ச்சியில் படக்குழு! - ரஜினி
தர்பார் படப்பிடிப்புத் தளத்திலிருந்து எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகி படக்குழுவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தற்போது அப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்புத் தளத்தில் ரஜினிகாந்த் போலீஸ் வாகனத்தில் இருந்து இறங்கி நடப்பது போன்ற ஒரு காட்சி தற்போது இணையதளங்களில் வெளியாகி வைரலாகிவருகிறது. இந்த காட்சியைக் கண்ட ரசிகர்கள் உற்சாக மிகுதியால் ரஜினியின் நடை, உடை, ஸ்டைல் போன்றவற்றை வர்ணித்து பல்வேறு கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.
படப்பிடிப்பு தளத்தில் அதிகக் கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டு இருந்த நிலையிலும் தர்பார் படத்தின் வீடியோ வெளியாகியிருப்பது படக்குழுவினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.