ரிஷிகேஷில் உள்ள புத்தகக் கடை ஒன்றில் ரஜினிகாந்த் புத்தகம் குறித்த விளக்கத்தை கடைக்காரரிடம் கேட்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஒவ்வொரு படப்பிடிப்பு முடிவடைந்த பின்பு இமயமலைக்குச் செல்வதை ரஜினி வழக்கமாகக் கொண்டிருந்தார். ஆனால் சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவு உள்ளிட்ட காரணங்களால் அவர் இமயமலைக்குச் செல்வதை தவிர்த்துவந்தார். காலா, 2.O உள்ளிட்ட படங்களின் படப்பிடிப்பு முடிந்தவுடன் மீண்டும் இமயமலைக்குச் செல்லத் தொடங்கினார்.
தற்போது தர்பார் படப்பிடிப்பு முடிவடைந்ததையடுத்து ரஜினிகாந்த் ஆன்மீக பயணமாக இமயமலைக்கு புறப்பட்டுச் சென்றார். இம்முறை தனது மகள் ஐஸ்வர்யா தனுஷை உடன் அழைத்துச் சென்றுள்ளார்.