இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வெளியான திரைப்படம் '2.0'. லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்த இத்திரைப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியான '2.0', சினிமா ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. இந்நிலையில் '2.0' திரைப்படம் இன்று சீனாவில் வெளியாகியுள்ளது.
48,000 திரையரங்குகளில் ரஜினியின் '2.0'! - சூப்பர் ஸ்டார்
ரஜினியின் பிரமாண்ட திரைப்படமான '2.0' சீனாவில் 48,000 திரையரங்குகளில் இன்று வெளியாகியுள்ளது.
2.0 in china
கடந்த ஜூலை 12ஆம் தேதி சீனாவில் 56 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாக இருந்த '2.0', 'தி லயன் கிங்' படத்தின் வெளியீட்டால் தள்ளிபோனது. தற்போது பிரமாண்டமாக 48 ஆயிரம் திரையரங்குகளில் '2.0' வெளியாகியுள்ளது. இந்தத் திரைப்படத்தை சீன மொழியில் மொழிபெயர்த்து விநியோகம் செய்தது எச்.ஒய் மீடியா எனும் சீன நிறுவனமாகும். சீனாவிலும் இந்தத் திரைப்படத்துக்கு நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.