தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

என்னால் வாக்களிக்க முடியவில்லை: ரஜினி வருத்தம் - நடிகர் சங்கத் தேர்தல்

வாக்குச் சீட்டு வந்து சேர தாமதமானதால் தன்னால் வாக்களிக்க  முடியவில்லை என ரஜினி வருத்தம் தெரிவித்துள்ளார்.

rajini

By

Published : Jun 22, 2019, 11:37 PM IST

நடிகர் சங்கத் தேர்தல் நாளை (ஜூன் 23) நடைபெறவுள்ளது. நேரில் வந்து வாக்களிக்க முடியாதவர்கள், தபால் மூலம் தங்கள் வாக்குகளைச் செலுத்த வாக்குச்சீட்டு அனுப்பும் பணி தேர்தல் அலுவலர் பத்மநாபன் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. நடிகர் ரஜினிகாந்துக்கு சரியான நேரத்தில் வாக்குச்சீட்டு சென்று சேராததால் அவர் வாக்களிக்கும் வாய்ப்பை தவறவிட்டுள்ளார்.

ரஜினியின் ட்விட்டர் பதிவு

இதுகுறித்து ரஜினி தனது ட்விட்டர் பக்கத்தில்,’நான் மும்பையில் படப்பிடிப்பில் உள்ளேன். தபால் ஓட்டு போடுவதற்கான வாக்குச்சீட்டு எனக்கு கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. நான் முன்பே பெற முயற்சித்தும், மாலை 6.45 மணிக்குதான் வாக்குச் சீட்டு வந்து சேர்ந்தது. இந்த தாமதத்தால் என்னால் வாக்களிக்க முடியவில்லை. இது விசித்திரமானதாகவும், துரதிர்ஷ்வசமானதாகவும் உள்ளது. இதுபோல் நடந்திருக்கக் கூடாது’ என பதிவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details