தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

இலங்கை குண்டுவெடிப்பு -ரஜினி, கமல், வைரமுத்து கண்டனம் - srilanka bomb blast

சென்னை: இலங்கையில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து ஆகியோர் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

ரஜினி கண்டனம்

By

Published : Apr 21, 2019, 7:17 PM IST

இலங்கையில் எட்டாவது குண்டு வெடிப்பு இன்று நிகழ்ந்துள்ளது. இதில், 207 பேர் கொல்லப்பட்டனர், 400-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த குண்டு வெடிப்புச் சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது. இதற்கு உலகத் தலைவர்கள் அனைவரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து ஆகியோர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

இதில், நடிகர் ரஜினிகாந்த், 'ஈஸ்டர் திருநாளான இன்று இலங்கையில் நடந்த இந்தத் துயரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை' என பதிவிட்டுள்ளார்.

நடிகர் கமல் தெரிவித்துள்ளதாவது, 'மனித கருத்து வேறுபாடுகளுக்கு வன்முறை எப்பொழுதும் தீர்வாகாது, அது இறுதியுமல்ல. இலங்கை குண்டுவெடிப்பில் பாதிப்படைந்துள்ள மக்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த சம்பவத்தில் பாரபட்சமின்றி பாதிப்படைந்தோருக்கு நீதி கிடைக்கும் வகையில், இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.

கமல் கண்டனம்

'உலகின் உன்னதமான பொருள் உயிர்தான். அதை அழிப்பதற்கு யாருக்கும் அதிகாரமில்லை. இலங்கையின் உயிர் பறிப்பு மனித உரிமைக்கு மாறானது. கண்ணீரோடு கண்டிக்கிறேன்' என கவிஞர் வைரமுத்து பதிவிட்டுள்ளார்.

வைரமுத்து கண்டனம்

முன்னதாக தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ராகுல் காந்தி, திருமாவளவன், வைகோ ஆகியோர் தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details