தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சிம்பு பிரச்சனையை கடவுள் பார்த்துக்கொள்வார் - டி.ராஜேந்தர்

சென்னை: நியாயத்தை நிலைநாட்டவும், நிதி பிரச்சனையை சரி செய்யவும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.

சிம்பு பிரச்சனையை கடவுள் பார்த்துக்கொள்வார்
சிம்பு பிரச்சனையை கடவுள் பார்த்துக்கொள்வார்

By

Published : Oct 23, 2020, 1:23 PM IST

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் அடுத்த மாதம் 22 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15 ஆம் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், தலைவர் பதவிக்கு டி.ராஜேந்தர் மற்றும் தேனாண்டாள் ஃபிலிம்ஸ் முரளி ஆகியோர் மனுத்தாக்கல் செய்தனர். மேலும், மற்ற பதவிகளுக்கும் மனு தாக்கல் செய்யப்பட்டன.

வேட்புமனுவை தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டி.ராஜேந்தர், ” உண்மையை, நியாயத்தை, சத்தியத்தை நிலைநாட்டுவதற்காகவும், தயாரிப்பாளர் சங்கத்தில் நிலவும் நிதி பற்றாக்குறையை போக்கவுமே தேர்தலில் போட்டியிடுகிறேன். ஒரு சிலர் சங்கத்தில் இருந்து பிரிந்து சென்று நடப்பு சங்கம் நடத்தினாலும், எங்கள் சங்கம் கிடப்பு சங்கமாக போய் விடாது.

சிம்பு பிரச்சனையை தீர்ப்பதற்காக நான் இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை. தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், நடிகர்கள் நலன் காக்க தொடர்ந்து பாடுவேன். கியூப், யூஎஃப், சோனி எதுவாக இருந்தாலும் இனி தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும் பணம் கொடுக்க முடியாது.

சிம்பு பிரச்சனையை கடவுள் பார்த்துக்கொள்வார் - டி.ராஜேந்தர்

விபிஎஃப் வரி, 8% கேளிக்கை வரி நீக்கப்பட்டால் தான் சிறிய படங்களை வெளியிட முடியும் ” என்றார். தேனாண்டாள் ஃபிலிம்ஸ் முரளி பேசிய போது, “ தயாரிப்பாளர்கள் நலன் காக்கும் அணி சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன். தங்கள் அணி வெற்றி பெற்றால் சிறிய பட்ஜெட் படங்கள் திரையில் வெளியிடுவதற்கும், Ottயில் சிறிய படங்களை வெளியிடவும் நடவடிக்கை எடுக்கப்படும் ” என்றார்.

இதையும் படிங்க: வேற லெவல் ட்ரான்ஸ்பர்மேஷன்- தெறிக்கும் ரியாஸ் கானின் சிக்ஸ் பேக் புகைப்படங்கள்!

ABOUT THE AUTHOR

...view details