இயக்குநர் நரேஷ் சம்பத் இயக்கத்தில் பிக் பாஸ் பிரபலம் ஆரவ் நடிக்கும் படம் ராஜபீமா. இப்படத்தில் ஆரவ்-க்கு ஜோடியாக ஆஷிமா நர்வால் நடிக்கிறார். இப்படத்தில் யானை ஒன்று முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறது. மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் இடையே நடைபெற்றுக் கொண்டிருக்கும் உரசல்களையும், விதிமீறல்களையும் இப்படம் அலசுவதாக படக்குழு தெரிவித்துள்ளது.
கொம்பன் 'ராஜபீமா' படத்தின் 2ஆம் ட்ராக் இன்று வெளியீடு...! - ஆரவ்
ஆரவ் நடிப்பில் உருவாகி வரும் ராஜபீமா படத்தின் இரண்டாம் ட்ராக் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
File pic
இதில் ஒரு பாடலுக்கு ஓவியா நடனமாட இருக்கிறார். ஏற்கெனவே இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்பொழுது இரண்டாம் ட்ராக்கை படக்குழு இன்று வெளியிட இருக்கிறது.