பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு ரசிகர்களை கவர்ந்தவர் ரைசா வில்சன். இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து விஐபி-2, நாச்சியார் உள்ளிட்ட படங்களில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.
வைரலாகும் பிக்பாஸ் ரைசாவின் முத்தக் காட்சி வீடியோ..! - காதலிக்க யாருமில்லை
நடிகை ரைசா முத்தம் கொடுக்கும் வீடியோ ஒன்று சமூகவலைத் தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அதையடுத்து நடிகர் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து 'பியார் பிரேமா காதல்' படத்தின் மூலம் நாயகியாகத் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படம் வெற்றியானதை தொடர்ந்து ரைசா தனக்கான தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார். தற்போது 'அலைஸ்' , ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக 'காதலிக்க யாருமில்லை' என்ற இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ரைசா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. அதில் அவர், தான் வளர்க்கும் செல்ல நாய்க்குட்டிக்கு முத்தம் கொடுப்பது போல் உள்ளது. மேலும் அதில் 'Do NOT kiss me, I mean it ' என்றும் பதிவு செய்துள்ளார். ரைசா கொடுக்கும் முத்தத்தை வாங்காமல் அந்த நாய்க்குட்டி திரும்பிக் கொள்கிறது. இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள், 'அதிர்ஷ்டமான நாய்க்குட்டி' என்று வழக்கம்போல் தங்கள் பாணியில் 'ஜொல்' கமெண்ட்ஸ் அடித்து வருகின்றனர்.