தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

’கே.ஜி.எஃப் 2’ படத்துடன் மோதும் ராகவா லாரன்ஸ்! - Rudhran release date

நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் ‘ருத்ரன்’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகிள்ளது.

ருத்ரன்
ருத்ரன்

By

Published : Aug 26, 2021, 2:02 PM IST

’பொல்லாதவன்’ படத் தயாரிப்பாளர் கதிரேசன், இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம், 'ருத்ரன்'. ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடித்து வரும் இதில் அவருக்கு ஜோடியாக முதன்முறையாக ப்ரியா பவானி சங்கர் நடித்து வருகிறார்.

இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் பூர்ணிமா பாக்கியராஜ், நாசர் உள்ளிட்டோரும் படத்தில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்படம் அடுத்த ஆண்டு தமிழ் புத்தாண்டான ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநாள் அன்று தான், 'கே.ஜி.எப் 2' படமும் திரையரங்குகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ராகவா லாரன்ஸ் 'அதிகாரம்', 'துர்கா' ஆகிய படங்களைக் கைவசம் வைத்துள்ளார்.


இதையும் படிங்க:’இளவரசே...அதற்குள் விடைபெற முடியாது...’ - வந்தியத்தேவனாக மாறி கார்த்தி ட்வீட்!

ABOUT THE AUTHOR

...view details