தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

Jai Bhim பார்வதி அம்மாளுக்கு வீடு கட்டித்தரும் முடிவை மாற்றிய லாரன்ஸ்

Jai Bhim படத்தின் உண்மைக்கதை நாயகனான ராசாக்கண்ணுவின் மனைவிக்கு வீடு கட்டித் தருவதாக இருந்த முடிவை மாற்றியுள்ளதாக நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

Jai Bhim
Jai Bhim

By

Published : Dec 25, 2021, 10:37 AM IST

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான 'ஜெய் பீம்' திரைப்படம் அனைத்துத் தரப்பினரிடமும் வரவேற்பைப் பெற்றது. உண்மைச் சம்பவத்தை அடிப்படியாக வைத்து வெளியான இப்படத்தின் நிஜ செங்கேணியான பார்வதி அம்மாளுக்குப் பலரும் உதவி செய்துவருகின்றனர். அந்தவகையில் நடிகர் ராகவா லாரன்ஸ் பார்வதி அம்மாளுக்கு வீடு கட்டித் தருவதாகத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ராகவா லாரன்ஸ் தனது முடிவை மாற்றியுள்ளதாகத் அவரது சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஜெய்பீம் படத்தின் உண்மைக் கதாநாயகனான ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாள் வறுமை நிலையில் வாழ்ந்துவருவதை 'வலைப்பேச்சு' மூலம் அறிந்த பிறகு, பார்வதி அம்மாளுக்கு எனது செலவில் வீடு கட்டிக் கொடுப்பதாக உறுதியளித்திருந்தேன்.

நிலத்தைப் பார்வையிட்டேன்

பார்வதியை நேரில் சந்தித்தும் அவரிடம் இதுபற்றி தெரிவித்தேன். அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகில் உள்ள, கீழ நத்தம் கிராமத்தில் பார்வதி அம்மாளின் மகளுக்கு நிலம் உள்ளது என்றும், அந்த இடத்தில் வீடு கட்டித்தரும்படி கேட்டுக்கொண்டனர்.

அதன்படி சில நாள்களுக்குமுன் கீழநத்தம் கிராமத்துக்கே சென்று வீடு கட்டுவதற்கான நிலத்தைப் பார்வையிட்டுவந்தோம்.

தொலைக்காட்சி செய்தி

விரைவில் வீடு கட்டும் பணியைத் தொடங்கும் முயற்சியிலிருந்த நிலையில், பார்வதி அம்மாளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் வீடு கட்டித்தர இருப்பதாகத் தொலைக்காட்சி செய்தி மூலம் அறிந்து மகிழ்ச்சியடைந்தேன்.

பார்வதி அம்மாளின் இன்றைய வறுமை நிலையை அறிந்து அவருக்கு வாழ்விடத்தைக் கட்டிக்கொடுக்க முன்வந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

முடிவு மாற்றம்

பார்வதி அம்மாளுக்கு வீடு கட்டித் தருவதற்காக நான் ஒதுக்கிய ஐந்து லட்சத்துடன் மேலும் மூன்று லட்சம் சேர்த்து, பார்வதி அம்மாள், அவருடைய மகள், அவருடைய இரண்டு மகன்கள் ஆகியோருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாயை வழங்க முடிவுசெய்துள்ளேன்.

பார்வதி அம்மாளுக்கு அவருடைய குடும்பத்தினருக்கும் நல்லது நடப்பதற்குக் காரணமாக இருந்த ஜெய்பீம் படக்குழுவினருக்கும், படத்தைத் தயாரித்த சூர்யா, ஜோதிகா, இயக்குநர் த.செ. ஞானவேல் அனைவரையும் இத்தருணத்தில் நன்றியோடு நினைவுகூருவோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:Jai Bhim - சர்வதேச அளவில் கிடைத்த அங்கீகாரம்

ABOUT THE AUTHOR

...view details