விக்ரம் பிரபு, சரத்குமார், ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வானம் கொட்டட்டும்'. இயக்குநர் மணிரத்தினத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய தனசேகரன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
இந்த நிலையில் இப்படம் குறித்து நடிகை ராதிகா சரத்குமார் பேசுகையில், 'எங்களைப் பொறுத்தவரை நாங்கள் செய்யும் செயலுக்கு முக்கியத்துவம் கொடுப்போம். நாங்கள் இருவருமே செய்கின்ற வேலையை, விருப்பத்துடன் செய்கிறோம். அதனால்தான் பல துறைகளில் திறமைகளை வெளிப்படுத்த முடிகிறது.
நாங்கள் இருவரும் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று நினைத்ததில்லை. ஏனென்றால் கதைகள் பிடித்ததில்லை. ஆனால் வானம் கொட்டட்டும் படத்தின் இயக்குநர் தனா கூறிய கதையைக் கேட்டதும், எங்கள் இருவருக்குமே கதை பிடித்துவிட்டது. இப்படத்தில் சரத்குமார் கதாபாத்திரம் தீவிரமானதாக இருக்கும். பொதுவாக நான் மாலை 6 மணிக்கு மேலும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் பணியாற்றமாட்டேன். இதுவரை இப்படித்தான் இருந்தது.
ஆனால், இந்தப் படம் அதற்கு விதிவிலக்காக மாறிவிட்டது. இயக்குநர் தனாவைப் பொறுத்தவரை கதையை எப்படி காட்சிப்படுத்த வேண்டும் என்பதில் மிகவும் தெளிவாக இருப்பார். தேவையில்லாத காட்சிகளை எடுத்து நேரத்தை வீணடிக்க மாட்டார்' என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: 'ராதிகாவிடம் பிடிக்காத விஷயம் இதுதான்' - சரத்குமார் ஓபன் டாக்!