'நடிகனுக்கு கட்டுப்பாடுகளை விதிக்காதீர்கள்' - விஜய்சேதுபதிக்கு ஆதரவு தெரிவித்த ராதிகா! - விஜய் சேதுபதி முத்தையா முரளிதரன்
சென்னை: விஜய் சேதுபதி நடிப்பில் உருவாக உள்ள '800' திரைப்படத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக நடிகை ராதிகா கருத்து தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகும் '800' என்ற படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கும் இப்படத்தை டார் மீடியா நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் இரு நாள்களுக்கு முன்பு வெளியானது. அதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் விஜய் சேதுபதிக்கு எதிரான கருத்துகளும், கோரிக்கைகளும் குவியத் தொடங்கியுள்ளன
சிங்கள அரசுக்கும், ராஜபக்ச அரசுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த முத்தையா முரளிதரனின் படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதை ஏற்க முடியாது என திரைப் பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்பட பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.