தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

இலங்கை குண்டுவெடிப்பு - உயிர்தப்பிய நடிகை ராதிகா - அந்தோணியார் ஆலயம்

இலங்கை குண்டு வெடிப்பில் இருந்து நடிகை ராதிகா நல்வாய்ப்பாக உயிர் தப்பியுள்ளார்.

நடிகை ராதிகா

By

Published : Apr 22, 2019, 8:15 AM IST

இலங்கையில் கொச்சிகடையில் உள்ள அந்தோணியார் ஆலயம், நீர்கொழும்பில் கட்டுவபிட்டி செபஸ்டியன் தேவாலயம், மட்டகளப்பு பகுதியில் தேவாலயம் ஆகிய மூன்று தேவாலயங்களிலும், ஷாங்ரிலா, சினமான் கிராண்ட் மற்றும் கிங்ஸ்பரி ஆகிய 3 தங்கும் விடுதி உள்ளிட்ட மொத்தம் 6 இடங்களில் நேற்று (ஏப்.22) காலை தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.

இந்த குண்டுவெடிப்பில் 215 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இந்த குண்டு வெடிப்பிற்கு உலக தலைவர்களும், திரைபிரபலங்களும் தங்களது கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை ராதிகா சரத்குமார், தனது ட்விட்டர் பக்கத்தில்,

"இலங்கையில் குண்டுவெடிப்பா, கடவுள் நம்மை காப்பாற்ற வேண்டும். கொழும்பு சினமான் கிராண்ட் ஹோட்டலில் இருந்து நான் இப்போது தான் கிளம்பினேன், அதற்குள் அங்கு குண்டுவெடிப்பு நிகழ்ந்ததை அறிந்து அதிர்ச்சியடைகிறேன்". என்று தெரிவித்துள்ளார்.

சினமான் கிராண்ட் ஹோட்டலில் குண்டு வெடிப்புக்கு சிறிது நேரம் முன்னர் ராதிகா தனது அறையை காலி செய்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details