ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ராதே ஷ்யாம்'. முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தி உருவாகிவரும் இப்படத்தில் பிரபாஸூக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துவருகிறார்.
மாபெரும் பொருள்செலவில் உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு இத்தாலி, ஜார்ஜியா, பாரீஸ் உள்ளிட்ட நாடுகளில் நடந்தது. உலக அளவில் 7 மொழிகளில் உருவாகும் இப்படத்தை யூவி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது.
இந்நிலையில் பிரபாஸின் பிறந்தநாளான இன்று (அக்.23) 'ராதே ஷ்யாம்' படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. கைரேகை நிபுணராக நடித்துள்ள பிரபாஸ் தன்னுடைய ரகசிய சக்தி வைத்துக் கடந்த காலத்தில் நிகழும் சம்பவங்களைத் தெரிந்துகொள்கிறார்.