தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'ராதே ஷ்யாம்' அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு! - பிரபாஸின் ராதே ஷ்யாம்

பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ராதே ஷ்யாம் மார்ச் 11ஆம் தேதி வெளியாகிறது எனப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

http://10.10.50.85:6060///finalout4/tamil-nadu-nle/finalout/03-February-2022/14362604_radheshyamm.JPG
http://10.10.50.85:6060///finalout4/tamil-nadu-nle/finalout/03-February-2022/14362604_radheshyamm.JPG

By

Published : Feb 3, 2022, 6:22 PM IST

ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ராதே ஷ்யாம்'. பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் பெரும் பொருள்செலவில் தயாரித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியிடப்படவுள்ளது. முன்னர் இத்திரைப்படமானது ஜன.14ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்திருந்தது. பின்னர் கரோனா பரவல் காரணமாக குறிப்பிட்ட தேதியில் ‘ராதே ஷ்யாம்’ திரைப்படம் வெளியிடப்படாது என அறிவிக்கப்பட்டது.

ராதே ஷ்யாம் வெளியீட்டுத் தேதி ட்வீட்

இந்நிலையில் தற்போது கரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு, வருகிற மார்ச் 11ஆம் தேதி ‘ராதே ஷ்யாம்’ திரைப்படம் வெளியிடப்படும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.

கரோனா பரவல் தளர்வுகள் காரணமாக ‘ஆர்ஆர்ஆர்’ படம் வருகின்ற மார்ச் 25ஆம் தேதியும், ‘வலிமை’ வருகின்ற பிப்ரவரி 24ஆம் தேதியும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:மீண்டும் இனியா... நடிகர் விமலின், 'விலங்கு' ரிலீஸ் அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details