'இமைக்கா நொடிகள்' படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை ராஷி கண்ணா. இப்படத்தைத் தொடர்ந்து ஜெயம் ரவியுடன் 'அடங்கமறு', விஷாலுடன் 'அயோக்யா' என அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து நடித்தார்.
ரசிகர்களை கிறங்கடித்த ராஷிகண்ணா போட்டோஷூட்..! - ஜெயம் ரவி
ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வரும் நடிகை ராஷி கண்ணா சமீபத்தில் நடத்திய போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது.
File pic
தற்போது விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் 'சங்கத்தமிழன்' படத்தில் ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் தமிழ் சினிமா மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு என பல்வேறு மொழிகளிலும் அடுத்தடுத்து வெற்றி படங்களில் நடித்து ரசிகர்களின் கனவு கன்னியாகவும் கதாநாயகியாக வலம் வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் ராஷி கண்ணா நடத்திய போட்டோஷூட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் சமூகவலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.