கரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வீட்டில் இருக்கும் திரைப்பிரபலங்கள் தங்களது சமூக வலைதள பக்கங்கள் மூலம் ரசிகர்களிடம் உரையாடி வருகின்றனர்.
அந்த வகையில் நடிகை ராஷி கண்ணா தனது சமூக வலைதளத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளித்தார். அப்போது ரசிகர் ஒருவர், "உங்களுடைய அடுத்த படங்கள்" யாருடன் என்று கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த ராஷி கண்ணா "தமிழில் 'அரண்மனை 3' மற்றும் சூர்யா - ஹரி இணையும் படத்தில் நடிக்கிறேன். தெலுங்கில் இரண்டு படங்கள் இருக்கிறது. அவை கரோனா லாக்டவுன் முடிந்தவுடன் தான் என்ன நிலைமை என்பது தெரியவரும். அதற்குப் பிறகு சொல்கிறேன்" என்று பதிலளித்துள்ளார்.
இப்பதிவின் மூலம் 'அருவா' படத்தில், ராஷி கண்ணா நாயகியாக நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது. 'அருவா' படத்தின் கதை விவாத பணிகள் அனைத்தும், முடிந்த நிலையில் கரோனா வைரஸ் காரணமாக, படப்பிடிப்பு தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:இத்தாலி சினிமாவில் மீண்டும் ஸ்டார்ட் கேமரா ஆக்ஷன்!