இதுகுறித்து பிவிஆர் சினிமாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், " கரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதால்,மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, குஜராத், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் திரையரங்குகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளன.
தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, திரையரங்குகள் திறக்க அனுமதி கொடுத்த மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் நாளை (ஜூலை 30) முதல் மீண்டும் திரையரங்குகள் திறக்கப்படுகின்றன.
கரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு நன்றி தெரிவிக்க விதமாக, திரையரங்குகள் திறக்கும் முதல் வாரத்தில் வாடிக்கையாளர்களுக்குப் புதிதாக 'JAB Offer' அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி, தடுப்பூசி செலுத்திய வாடிக்கையாளர் ஒருவர், தன்னுடன் மற்றொரு நபரை இலவசமாகக் குறிப்பிட்ட சில படங்களுக்கு அழைத்துச் செல்லலாம். அதே போல, ஒரு food and beverage combo வாங்குபவர்களுக்கு மற்றொரு எஃப் அண்ட் பி காம்போ இலவசமாக வழங்கப்படுகிறது.
பி.வி.ஆர் வரும் வாரங்களில் நாட்டில் வெளியிடப்படவுள்ள சில முக்கிய ஹாலிவுட் திரைப்படங்களைத் திரையிடுகிறது.
- "தி சூசைட் ஸ்குவாட்" - ஆகஸ்ட் 5,
- "மார்டல் கொம்பட்" - ஜூலை 30,
- "தி கான்ஜூரிங்: தி டெவில் மேட் மீ டெவில் டூ இட்" - ஆகஸ்ட் 13,
- "ப்ராமசிங் யங் வுமன்" - ஆகஸ்ட் 6,
- "ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 9" - ஆகஸ்ட் 19,
- "தி க்ரூட்ஸ்: எ நியூ ஏஜ்" மற்றும் "நோபடி" - ஆகஸ்ட் 27
பிவிஆர் சினிமாஸ் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் முழுமையாகத் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள்" என குறிப்பிட்டுள்ளனர்.
இதையும் படிங்க:8 ஆண்டு காதலியைக் கரம்பிடித்த சினேகன்