தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

எப்படி இருக்கிறது அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்படம்? - லேட்டஸ்ட் சினிமா செய்திகள்

புஷ்பா திரைப்படம் இன்று (டிசம்பர் 17) வெளியான நிலையில் பலரும் பாசிட்டிவான கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

புஷ்பா
புஷ்பா

By

Published : Dec 17, 2021, 1:43 PM IST

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா திரைப்படத்தை 'ரங்கஸ்தலம்' பட இயக்குநர் சுகுமார் இயக்கியுள்ளார். இதில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

செம்மரக் கடத்தலை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் இன்று (டிசம்பர் 17) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இதனையொட்டி ரசிகர்கள் திரையரங்குகளில் பட்டாசு வெடித்தும், அல்லு அர்ஜுன் பேனர்களுக்குப் பாலாபிஷேகமும் செய்தனர். மேலும் படத்தைப் பார்த்த பலரும் பாசிட்டிவான கருத்துகளைச் சமூக வலைதளங்களில் தெரிவித்துவருகின்றனர்.

புஷ்பா விமர்சனம்

இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் இன்று வெளியாகியிருக்கும் நிலையில், இரண்டாம் பாகம் 2022ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது.

இதையும் படிங்க:'புஷ்பா' படக்குழுவுக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கிய அல்லு அர்ஜுன்

ABOUT THE AUTHOR

...view details