தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

’மன்மத லீலை’ படத் தலைப்பு சர்ச்சை; தயாரிப்பாளர் ஆடியோ வெளியீடு! - மன்மத லீலை படத் தலைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த கவிதாலயா பாபு

மன்மத லீலை திரைப்படத்தின் தலைப்பானது கலாகேந்திரா தயாரிப்பு நிறுவனத்திடம் உள்ள நிலையில் முறையான அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டுள்ளது என எழுந்த சர்ச்சை குறித்து தற்போது படத்தயாரிப்பாளர் சிங்காரவேலன் ஆடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கமளித்துள்ளார்.

’மன்மத லீலை’ படத் தலைப்பு சர்ச்சை; தயாரிப்பாளர் ஆடியோ வெளியீடு!
’மன்மத லீலை’ படத் தலைப்பு சர்ச்சை; தயாரிப்பாளர் ஆடியோ வெளியீடு!

By

Published : Jan 21, 2022, 5:30 PM IST

'மாநாடு' திரைப்படத்தின் மெகா வெற்றியை தொடர்ந்து, வெங்கட் பிரபு இயக்கியுள்ள அடுத்த திரைப்படம் ’மன்மத லீலை’. இப்படத்தில் அசோக் செல்வன், சம்யுக்தா ஹெக்டே, ஸ்ருதி வெங்கட் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பிரேம்ஜி இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இத்திரைப்படத்தின் தலைப்பிற்கு கே. பாலச்சந்தர் ரசிகர் மன்ற பொதுச்செயலாளர் கவிதாலயா பாபு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். தலைப்பு கலாகேந்திரா தயாரிப்பு நிறுவனத்திடம் உள்ள நிலையில், முறையான அனுமதியின்றி எப்படி பயன்படுத்தலாம் எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில் மன்மத லீலை திரைப்பட சர்ச்சை குறித்து தயாரிப்பாளர் சிங்காரவேலன் ஆடியோ வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில், "40 ஆண்டுகளுக்கு முன்னர் பயன்படுத்திய தலைப்பை அனுமதி பெறாமல் பயன்படுத்தக்கூடாது என்பது நியாயமில்லை. இங்கு பல்வேறு சங்கங்கள் இருக்கின்றன. இதனால் தணிக்கை துறைக்கு செல்லும்போது யாரது ஒப்புதல் கடிதமும் தேவையில்லை.

இந்தத் தலைப்பு மத்திய அரசின் உரிய துறையில் பதிவு செய்யப்பட்டு, அனுமதி பெறப்பட்ட பிறகே தணிக்கை சான்றிதழ் பெற விண்ணப்பிக்கப்பட்டது. இது தொடர்பாக யார் நீதிமன்றம் சென்றாலும் சட்டரீதியாக எதிர்கொள்ள தயார்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:"ஒன் 2 ஒன்" படக்குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடிய சுந்தர்.சி!

ABOUT THE AUTHOR

...view details