ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவான படம் 'உத்தமவில்லன்'. இப்படத்தை லிங்குசாமி தயாரித்திருந்தார். இப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்காக கமல் ஞானவேல் ராஜாவிடமிருந்து 10 கோடி ரூபாய் வாங்கியுள்ளார். மேலும், 'உங்கள் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கியும் நடித்தும் தருகிறேன்' என்று வாக்குறுதியையும் கொடுத்துள்ளதாகத் தெரிகின்றது.
'உத்தமவில்லன்' கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்! - தயாரிப்பாளர் சங்கம்
கமல் தன்னிடம் வாங்கிய ரூ.10 கோடியை நான்கு ஆண்டுகளாகியும் திருப்பித் தரவில்லை என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
kamal
பணம் வாங்கி இத்தனை ஆண்டுகள் ஆகியும் கமல் தனது தயாரிப்பில் நடித்து கொடுக்கவில்லை. மேலும் வாங்கிய ரூ.10 கோடியை திருப்பித் தரவில்லை என்று ஞானவேல் ராஜா தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து விளக்கம் கேட்டு கமலுக்கு தயாரிப்பாளர் சங்கத்தினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இச்சம்பவம் சினிமா வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' - கைகோர்த்த கலை இயக்குநர்!