நடிகை மதுபாலா, நடிகர் பாபி சிம்ஹா நடிப்பில், ஜான் பால் ராஜ் என்பவர் தயாரித்து இயக்கிய படம் அக்னிதேவி. இது கடந்த 22 ஆம் தேதி படம் வெளியானது. இந்நிலையில் நடிகர் பாபி சிம்ஹா படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருமான ஜான் பால் ராஜ் மீது நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் அக்னி தேவி படத்தில் 5 நாட்கள் நடித்ததாகவும்,படத்தை இறுதியாக பார்த்தபோது சொன்னபடி தனது கதாப்பாத்திரத்தை எடுக்காமல் ஏமாற்றியதாகவும், ஆள்மாறாட்டம் செய்து தான் நடித்தது போல் காட்சிகள் அமைத்து மோசடி செய்துள்ளதாகவும்,ஒப்பந்தப்படி பணம் அளிக்கவில்லை என கூறியிருந்தார்.
அக்னி தேவி பட விவகாரம்: பாபி சிம்ஹா மீது தயாரிப்பாளர் சங்கம் போலீசில் புகார்! - பாபி சிம்ஹா மீது புகார்
சென்னை: அக்னிதேவி படம் தொடர்பாக நடிகர் பாபி சிம்ஹா மீது தமிழ் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆன ஜான் பால் ராஜ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து ஜான்பால் ராஜ் தலைமறைவாகியுள்ளார். இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் ப்ரவீன்காந்தி, ஸ்டாலின் ஆகியோர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளனர்.
பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது, அக்னி தேவி படத்தில் நடிக்கும்போது, நடிகர் பாபி சிம்ஹா முறையாக ஒத்துழைப்பு அளிக்கவில்லை. பட ஒப்பந்தத்தை மீறி செயல்பட்டுள்ளார்.குறிப்பாக நடிகை மதுபாலா காட்சிகள் அதிகமாக இருப்பதால், மீண்டும் சில காட்சிகள் தன்னை வைத்து படப்பிடிப்பு எடுக்ககோரி நடிகர் பாபி சிம்ஹா தொல்லை கொடுத்துள்ளார். இதனால் உண்மையை மறைத்து தயாரிப்பாளர் மீது பொய் புகார் தெரிவித்த நடிகர் பாபி சிம்ஹா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தயாரிப்பாளர்களுக்கு எதிராக செயல்படும் நடிகர் பாபி சிம்ஹாவிற்கு இனி பட வாய்ப்புகள் அளிக்கப்போவதில்லை. இந்த முடிவினை 80க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் எடுத்துள்ளனர் என்றனர்.