சென்னை: பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியாகி சாதியத்தின் கோர முகத்தைப் பட்டவர்த்தனமாகக் கிழித்தெறிந்த படம் 'ஆர்டிக்கிள் 15'. இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்கை அருண் ராஜா காமராஜ் உதயநிதி ஸ்டாலினை வைத்து இயக்கிவருகிறார். இந்தப் படத்தை ரோமியா பிக்சர்ஸ் சார்பில் ராகுல் தயாரிக்கிறார். போனி கபூரின் பே வியூ புரோஜக்ட் எல்எல்பி, ஜீ ஸ்டுடியோ நிறுவனங்கள் படத்தை இணைந்து வழங்குகின்றன.
பொள்ளாச்சிப் பகுதியில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பெயரிடப்படாமல் இருந்த இப்படத்திற்குப் படக்குழு சமீபத்தில் 'நெஞ்சுக்கு நீதி' என்ற தலைப்பு வைத்துள்ளது.