சோனாலி போஸ் இயக்கத்தில் பிரியங்கா சோப்ரா, ஃபரான் அக்தர், சாய்ரா வாசிம் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ‘தி ஸ்கை இஸ் பிங்க்’ (The Sky Is Pink). பிரியங்கா சோப்ராவின் திருமணத்துக்கு நான்கு நாட்கள் முன்பு, இதன் இறுதிக்காட்சி ஒன்று படமாக்கப்பட்டுள்ளது. அந்தக் காட்சியில் பிரியங்கா நடிப்பைப் பார்த்து நிக் ஜோனஸ் கண்கலங்கியிருக்கிறார்.
இதுகுறித்து இயக்குநர் சோனாலி, "ஷூட்டிங் முடியும் வேளையில் அங்கு வரும்படி பிரியங்காவின் காதலர் நிக் ஜோனஸுக்கு அழைப்பு விடுத்திருந்தோம். ஆனால் ஜோனஸ், குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பே வந்து ஷூட்டிங்கை வேடிக்கைப் பார்த்திருக்கிறார். பிரியங்கா அப்போது உணர்வுப்பூர்வமான காட்சியில் நடித்துக் கொண்டிருந்தார். திடீரென எங்கள் செட்டில் ஒரு தும்மல் சத்தம், திரும்பிப் பார்த்தால் நிக் ஜோனஸ் கண்கலங்கியபடி நின்றிருந்தார்" என தெரிவித்தார்.