பல்வேறு நாடுகளில் இயங்கிவரும் மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகம், சர்வதேச அளவில் உலகின் பிரபலமான ஆளுமைகளை கவுரவப்படுத்தும் விதமாக மெழுகு சிலைகளை உருவாக்கி வருகிறது. இந்த அருங்காட்சியகம், தற்போது நியூயார்க்கில் பிரியங்கா சோப்ராவுக்கு சிலை வைத்துள்ளது.
சிலையாக மாறிய பிரியங்கா சோப்ரா..! - ப்ரியங்கா சோப்ரா
எமி விருது விழாவில் பங்கேற்ற பிரியங்கா சோப்ராவை தத்ரூப சிலையாக வடிவமைத்துள்ளது மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகம்.
இந்த சிலை பிரியங்கா சோப்ரா எமி விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டதை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சிலை மிகவும் தத்ரூபமாகவும் அழகாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளதோடு, ஆடை வடிவமைப்பாளர் ஜேசன் வூ வடிவமைத்த கவுன், வைர சையின் மற்றும் கம்மல் ஆகிவற்றோடு பிரியங்கா சோப்ரா வாய்விட்டு சிரிக்கும் விதமாக உருவாக்கியுள்ளனர். இது காண்போரை ஆச்சரியப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
இதனை பிரியங்கா சோப்ரா நேரில் சென்று பார்வையிட்டதோடு மட்டுமல்லாமல் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். இந்நிலையில் மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகம் பிரியங்கா சோப்ராவின் சிலை இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் நிறுவப்பட இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.