தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஹாலிவுட் கனவு நாயகனுடன் அடுத்த படம் : உற்சாகமாக ஷூட்டிங்கை தொடங்கியுள்ள பிரியங்கா சோப்ரா! - மேட்ரிக்ஸ் 4இல் நடிக்க உள்ள பிரியங்கா சோப்ரா

பிரபல ஹாலிவுட் நடிகர் கியானு ரீவ்ஸுடன் ’மேட்ரிக்ஸ் 4’ திரைப்படத்தில் நடிக்க பிரியங்கா சோப்ரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது.

கியானு ரீவ்ஸ் பிரியங்கா சோப்ரா
கியானு ரீவ்ஸ் பிரியங்கா சோப்ரா

By

Published : Jul 7, 2020, 10:56 AM IST

பிரபல ஹாலிவுட் நடிகர் கியானு ரீவ்ஸ் நடிப்பில், கடந்த 1999ஆம் ஆண்டு உலகம் முழுவதும் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ’த மேட்ரிக்ஸ்’. ஆக்‌ஷன் திரைப்படங்களின் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை இன்று வரை பிடித்துள்ள இப்படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது உருவாகி வரும் ’மேட்ரிக்ஸ் 4’ திரைப்படத்தில் பிரபல இந்திய நடிகை பிரியங்கா சோப்ராவும் இணைந்துள்ளார்.

மேட்ரிக்ஸ் சீரிஸ் திரைப்படங்களின் இணை க்ரியேட்டரான லானா வாசோவ்ஸ்கி இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதம் தொடங்கி, பின்னர் கரோனா பொது முடக்கம் காரணமாக தள்ளிப்போனது. தற்போது இதன் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது.

படத்தில் பிரியங்கா சோப்ராவின் கதாபாத்திரம் குறித்த தகவல்கள் எதுவும் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், மேட்ரிக்ஸ் சீரிஸின் பிரதான கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை கேரி அன்னே மோஸ், நீல் பேட்ரிக் ஹேரிஸ் ஆகியோரும் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர்.

மேட்ரிக்ஸ் திரைப்படம் தவிர நெட்ஃபிளிக்ஸின் ’வி கேன் பி ஹீரோஸ்’ (We Can Be Heroes) திரைப்படத்திலும், ’சிட்டடல்’ (Citadel) எனும் அமேசான் சீரிஸிலும் பிரியங்கா அடுத்தடுத்து தோன்றவுள்ளார்.

மேலும், தனது கணவர் நிக் ஜோன்ஸ் இணைந்து தயாரிக்கும், இந்தியத் திருமணங்களில் நடைபெறும் பாரம்பரிய நிகழ்வுகள் குறித்த ’சங்கீத்’ எனும் அமேசானின் தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் பிரியங்கா நடிக்க உள்ளார்.

இதையும் படிங்க :வாய்ப்பு பறிபோனதை நினைத்து பல நாள்கள் அழுதிருக்கிறேன் - ’நெப்போட்டிஸம்’ குறித்து பிரியங்கா

ABOUT THE AUTHOR

...view details