தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'ஆடை'யில்லாமல் தோன்றிய அமலா பால் குடிச்சிருந்தாரா...! - கரண் ஜோகர்

நடிகை அமலா பால் நடிப்பில் உருவாகி வரும் புதிய படமான 'ஆடை' படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

File pic

By

Published : Jun 18, 2019, 4:34 PM IST

'மேயாத மான்' படத்தின் இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் நடிகை அமலா பால் நடித்து வரும் புதிய படம் 'ஆடை'. இப்படத்தின் கதை அமலா பாலை மையமாக கொண்டு அமைந்துள்ளது.

ஏற்கனவே இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பெரும் சர்ச்சைக்குள்ளானது. போஸ்டரில் அமலா பால் கிழிந்த ஆடையுடன் உடலின் பல பாகங்கள் தெரியும் படி போஸ் கொடுத்திருந்தார்.

போஸ்டர் வெளியானபோது விவாத பொருளாக மட்டுமில்லாது சமூகவலைதளங்களில் வைரலானது. இப்படத்தின் டீசர் வெளியீட்டு தகவலை அறிவிக்கும் விதமாக மேலும் ஒரு போஸ்டரை படக்குழு வெளியிட்டிருந்தது. அதில் மறைக்க ஒன்றும் இல்லை என்ற அர்த்தம் அடங்கிய வாசகமும் இடம்பெற்று சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், இப்படத்தின் டீசரை பிரபல பாலிவுட் இயக்குநர் கரண் ஜோகர் வெளியிட்டுள்ளார். இந்த டீசர் தற்போது ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details