தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'பொறுப்போடு இருங்கள்'- ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கிய பிரகாஷ் ராஜ் - கரனோ வைரஸ்

கரோனா வைரஸ் பரவாமல் இருக்க அனைவரும் பொறுப்போடு இருங்கள் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கிய பிரகாஷ் ராஜ்
ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கிய பிரகாஷ் ராஜ்

By

Published : Mar 29, 2020, 5:22 PM IST

கரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது. இதைக்கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் அடுத்த மாதம் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து பொதுமக்கள், திரையுலகப் பிரபலங்கள், அனைவரும் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர். பொதுமக்களும் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு திரையுலகப் பிரபலங்கள் பலரும் வேண்டுகோள் விடுத்து வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் நடிகர் பிரகாஷ்ராஜ் பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், "வைரஸ் தானாகப் பரவவில்லை. பொதுமக்களாகிய நாம் தான் அதைப் பரப்புகிறோம். வீட்டிலேயே இருங்கள்.

உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு உதவுங்கள். பொறுப்போடு இருங்கள். அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள். எதிர்காலத்தை நினைத்துப் பாருங்கள். என் மகனோடு நேரத்தைச் செலவிடுகிறேன்.'' என்று அதில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:பரவை முனியம்மா மறைவு குறித்து உருக்கமான பதிவு வெளியிட்ட விவேக்!

ABOUT THE AUTHOR

...view details