உலகை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் தொற்றால் பல்வேறு துறைகள் கடும் நஷ்டத்தைச் சந்தித்துவருகின்றன. குறிப்பாக, திரைப்படத்துறையில் படப்பிடிப்புகள் நடைபெறாததால், அத்துறையில் பணிபுரிந்துவரும் தொழிலாளர்கள் போதிய வருமானமின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரோனா எதிரொலி - ஃபெப்சி தொழிலாளர்களுக்கு நிதியுதவி வழங்கிய பிரகாஷ் ராஜ்! - prakash raj
நடிகர் பிரகாஷ் ராஜ் ஃபெப்சி தொழிலாளர்களுக்கு 10 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.
இந்நிலையில் அவர்களுக்கும், அவர்களது குடும்பங்களுக்கும் உதவ முன்வர வேண்டும் என்று, ஃபெப்சி சம்மேளனத்தின் தலைவர் ஆர். கே. செல்வமணி கோரிக்கை விடுத்தார். அதைத்தொடர்ந்து, நடிகர் பிரகாஷ் ராஜ், ஃபெப்சி தொழிலாளர்களுக்கு 25 கிலோ மதிப்புள்ள 150 அரிசி மூடைகளை அந்நிறுவனத்தின் தலைவரிடம் வழங்கியுள்ளார். இதேபோன்று, நடிகர் ரஜினிகாந்த் 50 லட்சமும், சிவகார்த்திகேயன், சூர்யா- கார்த்தி ஆகியோர் ரூ.10 லட்சம் நிதி உதவியாக வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பாலியல் வழக்கில் சிறையில் இருக்கும் தயாரிப்பாளருக்கு கரோனா!