தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

திருப்பதியில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த பிரபு - பிரபு படங்கள்

நடிகர் பிரபு தனது குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று (செப். 28) சாமி தரிசனம்செய்தார்.

பிரபு
பிரபு

By

Published : Sep 28, 2021, 1:33 PM IST

கோலிவுட்டைச் சேர்ந்த பிரபலங்கள் சமீப காலமாகத் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துவருவதைப் பார்த்துவருகிறோம். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நேற்று (செப்டம்பர் 27) தனது காதலன் விக்னேஷ் சிவனுடன் திருப்பதியில் சாமி தரிசனம்செய்தார்.

இந்நிலையில் இன்று நடிகர் பிரபு, அவரது மகன் விக்ரம் பிரபு, குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம்செய்தார்.

சாமி தரிசனம்செய்த பிரபு

அப்போது பேசிய பிரபு, "இந்தக் கரோனாவிலிருந்து சீக்கிரம் அனைவரும் விடுபட வேண்டும். அதற்கு ஏழுமலையான்தான் ஆசீர்வாதம்செய்ய வேண்டும். எப்போது திருப்பதிக்கு வந்தாலும் நல்ல தரிசனம் கிடைக்கும்.

ஆந்திர மக்கள் மிகவும் பிரியமாக இருக்கின்றனர். இந்தியாவில் இருக்கும் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும். இந்தியாவில் உள்ள அனைவரும் கரோனாவிலிருந்து விடுபட ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:காதலனுடன் நயன்தாரா திருப்பதியில் சாமி தரிசனம்

ABOUT THE AUTHOR

...view details