நடிகர் பிரபாஸ் தற்போது பூஜா ஹெக்டேவுடன் இணைந்து ‘ராதே ஷ்யாம்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். ராதா கிருஷ்ண குமார் இயக்கிவரும் இத்திரைப்படத்தில் சச்சின் கடேகர், பாக்யஸ்ரீ, ப்ரியதர்ஷினி, முரளி ஷர்மா, சாஷா சேட்ரி மற்றும் குணால் ராய் கபூர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் ‘ராதே ஷ்யாம்’ படத்தின் அப்டேட் வெளியிடுமாறு ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்துவந்தனர். இந்நிலையில், ‘ராதே ஷ்யாம்’ படத்தின் அப்டேட்டை படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.