இயக்குநர் ஓம் ராவுத் இயக்கத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான திரைப்படம் 'தன்ஹாஜி' (Tanhaji). அஜய் தேவ்கன் கதாநாயகனாக நடித்திருந்த இத்திரைப்படம் வசூல் ரீதியாக மாபெரும் வரவேற்பை பெற்றது.
பிரமாண்ட பட்ஜெட் படத்தில் நடிக்கும் பிரபாஸ்! - Latest cinema news
நடிகர் பிரபாஸ் 'ஆதிபுருஷ்' என்ற புதிய பிரமாண்ட படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதைத்தொடர்ந்து தற்போது இயக்குநர் ஓம் ராவுத், 'ஆதிபுருஷ்' என்ற படத்தை இயக்கவுள்ளார். பிரமாண்ட பொருட்செலவில் தயாராகும் இத்திரைப்படத்தை டீ-சீரிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் தயாராகும் இத்திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் பிரபாஸ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
3-டியில் தயாராகும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு 2021ஆம் ஆண்டு தொடங்கும் எனவும், 2022ஆம் ஆண்டு படம் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'ஆதிபுருஷ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிறது.