‘நடிகையர் திலகம்’ படப் புகழ் இயக்குநர் நாக் அஷ்வின் இயக்கத்தில் பிரபாஸ் தனது 21ஆவது படத்தில் நடிக்கிறார். அறிவியல் புனைவு (sci-fi) வகையைச் சேர்ந்த இத்திரைப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கிறது. மாபெரும் கலைஞர்கள் பலருக்கு சிவப்பு கம்பளம் விரித்த இந்நிறுவனம், இப்படத்தின் மூலம் தீபிகா படுகோனை தங்கள் தயாரிப்பில் நடிக்க வைக்க முடிவு செய்துள்ளது.
பிரபாஸ் 21 - தீபிகா படுகோனுடன் ஒப்பந்தம்! - sci-fi movie
பிரபாஸ் நடிக்கவுள்ள புதிய படத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Prabhas and Deepika padukone
தீபிகா படுகோனை வரவேற்கிறோம் என தங்கள் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, ஒரு யூடியூப் இணைப்பை பகிர்ந்துள்ளது. அதில், தீபிகா இடம்பெற்ற திரைப்படங்களின் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.