உலக அளவில் புகழ் பெற்ற ஜேம்ஸ் பாண்ட் சீரிஸ் படங்களில் 25வது படம், 'நோ டைம் டூ டை' என்ற பெயரில் உருவாகி வருகிறது. ஜமைக்கா, நார்வே, யுகே-விலுள்ள பைன்வுட் ஸ்டூடியோஸ், லண்டன் ஆகிய இடங்களில் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. வில்லனாக ராமி மாலெக் நடிக்கிறார்.
இந்த நிலையில், தெற்கு இத்தாலியில் அமைந்துள்ள மடேரா நகரில் கடந்த சில நாட்களாக 'நோ டைம் டூ டை' படத்தின் ஷுட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து, அங்குள்ள தெருக்களில் கார், பைக் என பரபர சேஸிங் காட்சிகள் படமாக்கப்படுகின்றன. இதில் டேனியல் கிரேக் பங்கேற்று ஸ்டன்ட் காட்சிகளில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தில் லியா சிதோ, நியோமி ஹாரிஸ், பென் வின்ஷா, ரால்ப் ஃபைன்ஸ் உள்ளிட்டோர் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.