தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

நல்ல கதையுடன் உங்களை விரைவில் சந்திப்போம் - இயக்குநர் சபரிநாதன் முத்து பாண்டியன் - ரீ ரிக்கார்டிங் டப்பிங்

இயக்குநர் சபரிநாதன் முத்து பாண்டியன் இயக்கத்தில் உருவாகிவரும் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெறும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

Senbha
Senbha

By

Published : May 14, 2020, 10:02 AM IST

கரோனா தொற்று காரணமாக மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் தமிழ்நாடு அரசு 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. அதன் காரணமாக பல பணிகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. அதன்படி சினிமா துறையிலும் படப்பிடிப்பு, இதர பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன் தமிழ்நாடு அரசு சினிமா துறையில் படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகளான ரீ ரெக்கார்டிங், டப்பிங் போன்ற பணிகளைத் தொடங்கலாம் என அறிவித்திருந்தது.

அதன்படி சினிமா தயாரிப்பு நிறுவனங்கள் ரீ ரெக்கார்டிங் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது. இதனையடுத்து செண்பா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் சபரிநாதன் முத்து பாண்டியன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெறும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இயக்குநர் சபரிநாதன் முத்து பாண்டியன்

ஊரடங்கு காரணமாக பணியின்றி இருந்த கலைஞர்கள் இப்போது சுறுசுறுப்புடன் பணியாற்றுவது போன்று இந்த வீடியோ அமைந்துள்ளது. இந்தப் படத்தின் தலைப்பு மே 18ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இந்தச் சூழ்நிலைக்கு ஏற்ப நல்ல கதையோடு உங்களை விரைவில் சந்திப்போம் என்று சபரிநாதன் முத்து பாண்டியன் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: லோக்கல் சேனலுக்கு எச்சரிக்கை விடுத்த கே.ஜி.எஃப் தயாரிப்பாளர்!

ABOUT THE AUTHOR

...view details