தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மருத்துவமனையில் நடிகை பூனம் பாண்டே: கணவர் கைது - நடிகை பூனம் பாண்டேவின் வீடியோ

மனைவியை தாக்கியதாக நடிகை பூனம் பாண்டேயின் கணவர் சாம் பாம்பேயை மும்பை காவல்துறையினரால் கைது செய்தனர்.

Sam Bombay
Sam Bombay

By

Published : Nov 9, 2021, 1:11 PM IST

தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ஒருசில படங்களில் மட்டும் நடித்தவர் பூனம் பாண்டே. இவர் படத்தில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானதைவிட சமூகவலைதளத்தில் உச்சக்கட்ட கவர்ச்சி படங்களை வெளியிட்டு மிகவும் பிரபலமானர். நாடு முழுவதும் கரோனா வைரஸ் அச்சம் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட போது பூனம் பாண்டே, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டு உற்சாகப்படுத்தினார்.

சமூகவலைதளத்தில் அவ்வப்போது கவர்ச்சி படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வந்த பூனம் பாண்டே, 'லவ் ரோபோட்' என்ற தலைப்பில் ஆடை இல்லாமல் முழு நிர்வாண வீடியோவை வெளியிட்டார்.

பூனம் பாண்டே சாம் பாம்பே என்பவரை காதலித்து 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். கோவாவில் தங்களது தேனிலவை கொண்டாடி வந்த நிலையில், தன்னை கொடுமைப்படுத்துவதாக கூறி காவல் துறையினரிடம் தன் கணவர் மீது பூனம் பாண்டே முதல் முறையாக புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில், தன் கணவர் தன்னை தாக்கியதாக கூறி பூனம் பாண்டே மும்பை காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில், சாம் பாம்பே மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், பூனம் பாண்டேவை சாம் பாம்பே தாக்கியுள்ளார். இதில் பூனம் பாண்டேவின் தலை, கண்கள், முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. அதற்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்" என்றனர்.

இதையும் படிங்க: திருமணம் செய்து கொண்டது துரதிர்ஷ்டவசமான முடிவு - பூனம் பாண்டே

ABOUT THE AUTHOR

...view details