தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

தளபதி 65 அப்டேட்- விஜய்க்கு ஜோடியான பூஜா ஹெக்டே - விஜய் 65

சென்னை: நடிகர் விஜய்யின் 65ஆவது படத்தில் பூஜா ஹெக்டே இணையவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

தளபதி 65 அப்டேட்
தளபதி 65 அப்டேட்

By

Published : Mar 24, 2021, 6:12 PM IST

’மாஸ்டர்’ படத்தையடுத்து நடிகர் விஜய் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனது 65ஆவது படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 'கோலமாவு கோகிலா' படத்தைப் பட இயக்குநர் நெல்சன் தளபதி 65 படத்தை இயக்குகிறார். தற்காலிகமாக 'தளபதி 65' என்று அழைக்கப்படும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

மேலும் இப்படத்தில் யோகி பாபு, குக்வித் கோமாளி புகழ் ஆகியோர் நடிக்க இருப்பதாகத் தெரிகிறது. தளபதி 65 படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்கி, அக்டோபர் அல்லது நவம்பரில் முடிக்கப் படக்குழுத் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details