வம்சி பைடிபல்லி இயக்கத்தில் மகேஷ் பாபு, பூஜா ஹெக்டே, அல்லரி நரேஷ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வெளியான படம் ‘மகரிஷி’. 2019ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் விவசாயத்தின் தேவை குறித்து வலியுறுத்தியது. தெலுங்கில் இப்படம் நல்ல ஹிட்டானது.
கேப்சன் திஸ்: மகரிஷி புகைப்படத்தை பகிர்ந்த பூஜா - பூஜா ஹெக்டே
2019ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் விவசாயத்தின் தேவை குறித்து வலியுறுத்தியது. தெலுங்கில் இப்படம் நல்ல ஹிட்டானது.
Pooja Hegde shares Maharishi movie pic
இந்நிலையில், பூஜா ஹெக்டே இந்த படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை பகிர்ந்து இதுக்கொரு தலைப்பு சொல்லுங்கள் என குறிப்பிட்டுள்ளார். இதில் பூஜா உடன் இயக்குநர் வம்சி பைடிபல்லி, மகேஷ் பாபு, நடன இயக்குநர் ராஜசுந்தரம் ஆகியோர் இருக்கின்றனர்.
பூஜா ஹெக்டே தற்போது சல்மான் கானுடன் ‘பைஜான்’ எனும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.