தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'பாரதி மொழியில் பலே பாண்டியா' - முதலமைச்சரைப் பாராட்டிய வைரமுத்து

பாரதியார் நினைவுநாள் மகாகவி நாளாகக் கடைப்பிடிக்கப்படும் என அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலினை வைரமுத்து பாராட்டியுள்ளார்.

வைரமுத்து
வைரமுத்து

By

Published : Sep 11, 2021, 1:20 PM IST

மகாகவி பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர் 11ஆம் தேதி, இனிவரும் ஆண்டும் முதல் மகாகவி நாளாகக் கடைப்பிடிக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

இந்நிலையில் இது குறித்து கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், "பாரதியின் நினைவுநாள் மகாகவி நாளாகக் கடைப்பிடிக்கப்படும் என்பது உள்ளிட்ட 14 அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை பாரதி மொழியில் 'பலே பாண்டியா' என்று பாராட்ட வேண்டும்.

கவிதை உலகத்தைக் கதகதப்பாக வைத்திருக்கும் முயற்சிகள் வெல்க. நன்றி" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:பாரதி நினைவு நாள்: தமிழில் ட்வீட் செய்த பிரதமர் மோடி

ABOUT THE AUTHOR

...view details